துபாய் விமான நிலையத்தில் சிக்கிய அதர்வா, அனுபமா

0
18

கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அதர்வா நடித்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அசர்பைஜான் நாட்டில் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக அதர்வா சனிக்கிழமை சென்னையில் இருந்து துபாய் வழியாக அசர்பைஜான் செல்லும் விமானத்தில் கிளம்பினார்.

ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டுக்கு சென்று இருக்க வேண்டும்.

ஆனால் துபாயில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

துபாய் விமான நிலைய ஓடுபாதையும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால் விமானங்கள் கிளம்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதர்வா சென்ற விமானமும் சிக்கியதால், அவரால் ஞாயிறு அன்று அசர்பைஜான் நாட்டுக்கு செல்ல முடியவில்லை.

துபாய் விமான நிலையத்திலேயே சிக்கி கொண்டார். ஒரு நாள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. பின்னர் புறப்பட்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here