தனுஷ் படத்தில் நடிக்கும் 96 பட நடிகை

0
60

நடிகர் தனுஷின் 41வது படத்தை பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு கர்ணன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் சேதுபதியுடன் 96 படத்தில் நடித்திருந்த கவுரி கிஷன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here