3 கோடிக்கு கார் வாங்கிய சூர்யா பட இயக்குநர்

0
177

பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டிக்கு சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் அவர் ரூ. 3 கோடி மதிப்புள்ள லம்போர்கினி(Lamborghini Urus)காரை வாங்கியுள்ளார்.

அந்த கார் இந்தியாவில் உள்ள சில பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது. ரோஹித் புது கார் வாங்கிய கையோடு அவரை காருக்கு முன்பு நிற்க வைத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்கள் லம்போர்கினியின் மும்பை டீலர்ஷிப் எடுத்தவர்கள்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். ரோஹித் ஷெட்டியிடம் ஏற்கனவே ஃபோர்டு மஸ்டாங், ரேஞ்ச் ரோவர், மாசெராட்டி கிரான்டுரிஸ்மோ உள்ளிட்ட பல கார்கள் உள்ளன.

ரோஹித் ஷெட்டி தற்போது அக்ஷய் குமாரை வைத்து சூரய்வன்ஷி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது. ரோஹித் ஷெட்டி மசாலா படங்களை எடுப்பதற்கு பெயர் போனவர்.

நம்ம சூர்யா நடித்த சிங்கம் படத்தை இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து ரீமேக் செய்தவர் ரோஹித் ஷெட்டி. அவர் படங்கள் வெளியாகும்போது எல்லாம் மூளையை கழற்றி வைத்துவிட்டு சென்று படத்தை பார்க்குமாறு விமர்சகர்கள் தெரிவிப்பார்கள். ஆனால் ரசிகர்களோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தியேட்டர்களுக்கு படையெடுத்து அவரின் படங்களை சூப்பர் ஹிட்டாக்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here