மலையாள மொழியில் பல விருதுகளை வாங்கி தன் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மஞ்சுவாரியர். இவர் திருமணமாகி சில வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாத்துறைக்கு வந்தார். தமிழில் அசுரன் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில் தனக்கு இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது போலிசில் புகார் அளித்துள்ளார். இவரால் என் உயிருக்கு ஆபத்து எனவும், தன்னை பற்றி சமுகவலைத்தளத்தில் அவதூறு பரப்புவதும், வாய்மொழியாக பல இடங்களில் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் புகாரளித்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பை இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் சமுகவலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். மஞ்சு வாரியர் திருமண்த்திற்கு பிறகு வங்கி கணக்கில் 1500 ரூபாயோடு என்னிடன் வந்து எனது விளம்பரத்தில் நடிக்க 25 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு என்னை புகழ்ந்து தள்ளினார்.
இதனால் எனக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உங்களால் என்னைவிட்டு சென்றனர் என்று கூறி, இந்த புகாரில் நான் அனைத்து ஒத்துழைப்புகளையும் தருகிறேன் என்று சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.