24 வருடங்களுக்கு பின்…. புதிய தொழில்நுட்பத்தில் தல படம் ரிலிஸ்

0
76

கோலிவுட்டில் வி.சி.குகநாதன் டைரக்டு செய்து அஜித் நடித்த படம் `மைனர் மாப்பிள்ளை.

கடந்த ‘ 1995-ம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது.

இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், ஒய்.ஜி.மகேந்திரன், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள்.

படத்தின் கதை விபரம்

மகனுக்கு பெண் தர மறுத்த ஸ்ரீவித்யாவிடம் சவால் விடும் வடிவேல், அதற்காக அஜித்தையும், ரஞ்சித்தையும் களம் இறக்குகிறார்.

அவர் நினைத்தது நிறைவேறியதா? என்பதே திரைக்கதை. படத்தில் 5 பாடல்கள், 5 சண்டை காட்சிகள் இடம்பெற்றிருந்தன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்த படம், இது.

டிஜிட்டல் தொழில்நுட்பம்

24 வருடங்களுக்குப்பின், இந்த படம் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்டுள்ளது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, வி.சி.குகநாதன் டைரக்டு செய்திருந்தார்.

அவரே `மைனர் மாப்பிள்ளை’ படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here