23வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் யுவன்!

0
14

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இசைப்பயணத்தில் 23வது ஆண்டை  எட்டியுள்ளார். அவர் முதன் முதலில் இசையமைத்த ‘அரவிந்தன்’ திரைப்படம் 27 பிப்ரவரி 1997ஆம் ஆண்டு வெளியானது.

அந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டதை குறிக்கும் வகையில், யுவனின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #23YearsofYuvanism என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், இசைப்பயணத்திற்கு உதவியவர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘நீங்கள் தந்த அன்பும், ஆதரவும் இல்லை என்றால் இத்தனை ஆண்டுகளில் இது சாத்தியம் ஆகியிருக்காது. உங்களது அன்பு மட்டுமே என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் ஊக்குவிப்பாக இருந்தது. என் மனம் அன்பாலும், நன்றிகளாலும் நிறைந்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here