விவசாய கண்டுபிடிப்புகளுக்கு கார்த்தியின் பரிசு

0
92

நடிகர் சூர்யா, கல்விக்காக அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். அவரது தம்பி கார்த்தியோ விவசாயத்துக்கக உழவன் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம் விவசாயம் சார்ந்த பல்வேறு சமூக சேவைகளிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருபவர் கார்த்தி.

கடந்த ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல உதவிகளை செய்தார் கார்த்தி. விவசாயத்தை மையப்படுத்தி புதிய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு போட்டிகளை அறிவித்திருக்கிறார் அறிவித்துள்ளார் கார்த்தி.

”விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டதே இந்த அமைப்பு. விவசாயிகளை பாராட்டும் பொருட்டு இந்த அமைப்பின் மூலம் உழவன் விருதுகள் வழங்கப்படும். மேலும் உழவு செய்வதை எளிமையாக்கும் புதிய கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு போட்டிகளை அறிவித்திருக்கிறோம். சிறு, குறு விவசாயிகளுக்கு பயன்ப்படும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டு பிடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்து முதல் மூன்று சிறந்த கருவிகளுக்கு மொத்தம் ரூ1.5 லட்சம் பரிசு வழங்கப்படும்” என்று கூறி உள்ளார் கார்த்தி.

அவரது இந்த அறிவிப்பின் மூலம் பல புதிய விவசாய கருவிகள் உருவாக வாய்ப்பிருக்கிறது. கார்த்தி நடித்து தற்போது முடித்துள்ள படம் ‘கைதி’. ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்தில் ஜோதிகாவின் தம்பியாக நடிக்கிறார். இந்தப்படத்தை முடித்த பிறகு ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here