10 கெட்டப்பில் பக்தி பழமாக மாறிய சியான் விக்ரம்

0
27

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றுகிறார்.

இந்த நிலையில் இதுவரை இல்லாத புதிய கெட்டப் ஒன்றில் இந்த படத்திற்காக அவர் தற்போது தோன்றுகிறார். இந்த கெட்டபுடன் விக்ரம், கேரள மாநிலம் அலிபி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் விக்ரம் பக்தி பழமாக மாறி குர்தா வேஷ்டி மற்றும் சில்க் சட்டையுடன் கூடிய கெட்ட்பப்பில் நடித்து வருகிறார்.

அலிபி கிருஷ்ணன் கோயிலில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில வசனக்காட்சிகள் படமாக்கப்படுவதாகவும் இதே கோயிலில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதனையடுத்து கொச்சியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here