வெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

0
48

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று படம் இயக்கிய சுதா கொங்கரா உடன் சூர்யா இணைந்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கன் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

சூர்யாவின் கெரியரில் இந்த படம் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி போஸ்டரை வெளியிட்டு சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். சூரரைப் போற்று படத்தில் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் மாறன்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here