விழிப்புணர்வு செய்ய நினைத்த பிரியங்கா! வருத்தெடுத்த நெட்டீசன்கள்

0
39

டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசுபட்டு இருப்பதை உணர்த்தும் விதமாக பிரியங்கா சோப்ரா நேற்று சமூக வலைத்தளங்களில் முகமூடி உடன் இருக்கும் புகைபடம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

டெல்லியில் தற்போது நிலவி வரும் காற்று மாசு காரணமாக இங்கு வாழ்வதே கடினமாக இருக்கிறது என கூறியிருந்தார் பிரியங்கா சோப்ரா. மேலும் இங்கு திரைப்டத்திற்கான காட்சிகள் படமாக்குவதில் மிகுந்த சிரமம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு முக்கிய காரணமாக வல்லுனர்கள் சொல்வது பெருகி வரும் மக்கள் தொகை தான் காரணம் என்றுள்ளனர்.

பிரியங்கா சோப்ரா விழிப்புணர்விற்காக இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தாலும் நம்ம நெட்டிசன்கள் விடுவார்களா சும்மா வருத்தெடுத்து விட்டனர்.அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். முதலில் நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்துங்கள் என கூறி அவரை விமர்சித்து வருகின்றனர்.

டெல்லி மாசடைவதற்கும் பிரியங்கா புகைபிடிப்பதற்கும் என்ன சம்மந்தம் என்று தான் தெரியவில்லை.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here