விஜய், விஜய் சேதுபதி இணையும் தரமான சம்பவம் ஜனவரி 1ஆம் தேதி வருகின்றது

0
30

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விரைவில் படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் ஒரு சில டைட்டில்களை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் அவர் சென்னை திரும்பியதும் அந்த டைட்டில்களில் ஒன்றை முடிவு செய்து ஜனவரி 1ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் தேர்வு செய்து வைத்துள்ள டைட்டில்களில் ஒன்று ‘சம்பவம்’ என்றும் கூறப்படுகிறது.

எனவே ஜனவரி 1ம் தேதி விஜய் ரசிகர்களுக்கு தரமான சம்பவம் இருக்கின்றது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாகவும் மாளவிகா மேனன் நாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் சாந்தனு அந்தோணி வர்கீஸ், ரம்யா, பிரிகிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here