விஜய் சேதுபதி பெயரிலேயே அடுத்த படத்திற்கான பெயர் ரெடி!

0
19

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தற்போது அதிகமான ரசிகர்களை தனது நடிப்பால் கட்டி போட்டுள்ளார் விஜய் சேதுபதி. தற்போது படமாக்கப்பட்டு வரும் திரைப்படத்திற்கு அவரது பெயரான விஜய் சேதுபதி என்றே படத்தின் பெயரை வைத்திருக்கின்றனர். இது போன்ற ஒரு பாக்கியம் எல்லா நடிகர்களுக்கும் கிடைத்துவிடாது. ஒரு சிலருக்கு மட்டும் தான் கிடைக்கும். அந்த வகையில் விஜய் சேதுபதி அதிர்ஷ்டகாரர் என்றே சொல்லாம். ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ போன்ற ஒருசில படங்கள் மட்டுமே அந்த படத்தில் நடித்த நடிகர்களின் பெயரே டைட்டிலாக அமைந்துள்ளது. இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த ஒரு படத்திற்கு ‘விஜய்சேதுபதி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த ‘சங்கத்தமிழன்’ என்ற திரைப்படம் கடந்த தீபாவளி அன்றே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் தள்ளிப்போன இந்த படம் தற்போது நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் அதே நவம்பர் 15ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘விஜய்சேதுபதி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டு சற்றுமுன் டைட்டிலுடன் கூடிய போஸ்டரையும் படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் ராகுல் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here