விசிலை பறக்கவிடும் விஜய்யின் பிகில் படக்குழு- போட்டோவை வெளியிட்ட பிரபலம்

0
15

பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் பிகில் படத்தில் பயிற்சியாளராக நடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்று மாலை முக்கிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் பாடல் ஒன்றை விஜய் பாடவுள்ளார் என்ற அப்டேட் கிடைத்தது.

இதனிடையே இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜி.கே.விஷ்ணு தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அனைவரும் விசிலடிக்கும்படி போஸ் கொடுத்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here