வாய்ப்புகள் இல்லாமல் தவித்த அதுல்யாவுக்கு அடித்த ஜாக்பாட்

0
168

காதல் கண் கட்டுதே, ஏமாளி போன்ற படங்களில் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை அதுல்யா ரவி. அவரது கியூட்டான நடிப்பு இளம் ரசிகர்களை அதிகம் ஈத்துவிட்டது என்றும் சொல்லலாம்.
இருப்பினும் அதன்பிறகு அவருக்கு முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சாட்டை இரண்டாம் பாகம், நாடோடிகள் 2 போன்ற படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார்.
மேலும் அவர்நடிகர் ஜெய்க்கு ஜோடியாக கேப்மாரி படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் தளபதி விஜய்யின் அப்பா எஸ்ஏசி தான் இந்த படத்தின் இயக்குனர்.
இந்நிலையில் தற்போது அதுல்யா மீண்டும் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். வெற்றிச்செல்வன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்தில் ஜெய்-அதுல்யா இருவரும் ஐடியில் பணியாற்றுபவர்களாக நடிக்கவுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here