வள்ளுவர் வெள்ளை உடை போட்டா என்ன? காவி உடை போட்டா என்ன? சர்ச்சையை கிளப்பிய கஸ்தூரி!

0
68

அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து கூறு அதிக சர்சையில் சிக்கி கொள்பவர் தான் கஸ்தூரி. தற்போது தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சணையாக மாறி வரும் திருவள்ளுவர் சிலை குறித்த கருத்து தெரிவித்து நெட்டீசன்கள் மத்தியல் பேசும் பொருளாக மாறி வருகின்றார் நம்ம நாயகி. அப்படி என்ன சொன்னார் என்பதை தெரிந்துக்கொள்ள கீழே முழுவதுமாக படிக்கலாமே.

கடந்த இரண்டு நாட்களாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் எந்த மதம்? அவருடைய உடை எந்த வண்ணம்? என திராவிட கட்சிகளும் பாஜகவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உள்ள திருவள்ளுவரின் உருவமே கற்பனையாது என்பது தெரிந்தும், அவருக்கு காவிச்சாயம் பூசுவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் என திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை மக்கள் வெறுப்புடன் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் எந்த ஒரு சமூக பிரச்சனைக்கும் தனது மனதில் தோன்றுவதை தைரியமாக சொல்லும் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கூறியபோது, ‘வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே.. திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு. திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து.

துறவின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல. இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா? என்று பதிவு செய்துள்ளார்.

வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here