வசுலை தாண்டி உண்மையான வெற்றியை நிரூபித்த பிகில் திரைப்படம்

0
148

பிகில் திரைப்படம் வசூல் அளவில் எப்படியோ, மனதளவில் இந்த படம் நிஜமான வெற்றியை பெற்றுள்ளது என்பதற்கு தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றே சான்றாக உள்ளது.

பிகில் படத்தில் ஆசிட் வீசியதால் முகம் பாதிக்கப்பட்ட ரெபா மோனிகா கேரக்டர் ஒன்று இருக்கும். இந்த கேரக்டரிடம் விஜய் பேசி வீட்டுக்குள் முடங்கியிருந்த அவரை வெளியே வரவழைத்து கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள வைப்பார். முன்னதாக இந்த கேரக்டர்ஆசிட் வீசியவனையே நேரில் சந்தித்து ‘ஆசிட் வீசிய நீயே வெளியே நடமாடும்போது, நான் ஏன் வீட்டுக்குள் முடங்கியிருக்க வேண்டும்’ என்ற வசனம் அனைவரையும் கவர்ந்திருக்கும்.


இந்த நிலையில் பிகில் படத்தை பார்த்த ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இந்த வசனத்தை பேசிய வீடியோ ஒன்றுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதுபோன்ற பெண்கள் வெளியே தைரியமாக வருவதுதான் இந்த படத்தின் உண்மையான வெற்றி என நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவை பிகில் படத்தில் நடித்த நடிகை வர்ஷா பொம்மலா உள்பட பலர் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி என்பது வசூல் மட்டும் என்பதில்லை வாழ்ந்து காட்டுவதிலும் கூட தான். சிங்கப் பெண்ணே என பலர் பாராட்டுகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here