கோலிவுட்டில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா படத்தை இயக்கிய வி.இசட் துரை இருட்டு படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் பற்றி வி.இசட் துரை கூறியதாவது:- இது வழக்கமான பேய் படம் அல்ல. ஜின் என்ற புது படைப்பை தென் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்துகிறோம்.
குர் ஆனில் பேசப்பட்டுள்ள விஷயம் இது. ஜின் என்ற படைப்பு மனிதனை விட சக்தி வாய்ந்தது.
இப்படத்தில் சாக்ஷி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பயமுறுத்தும் காட்சிகள் அதிகமாக இருந்ததால் சென்சாரில் ஏ சான்றிதழ் தான் தருவோம் என்றார்கள்.
20 காட்சிகளை வெட்டி யூ/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். அடுத்து அமீர் நடிப்பில் நாற்காலி படத்தை இயக்கி வருகிறேன்.
அடுத்து சிம்புவுடன் தொட்டி ஜெயா 2 கண்டிப்பாக வரும்’ என்றார்.