மீண்டும் கைகோர்க்கும் விஜய் அட்லி

0
196

இயக்குநர் அட்லி ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தால் அவர் அடுத்ததாக விஜய்யை வைத்து தான் படம் எடுக்கப் போகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

அட்லி இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என மொத்தம் நான்கு படங்களை இயக்கியுள்ளார். அதில் ராஜா ராணியை தவிர மற்ற படங்களின் ஹீரோ விஜய் தான். விஜய்யை வைத்து ஒரு படத்தையாவது எடுக்க வேண்டும் என்று பல இயக்குநர்கள் காத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த அட்லிக்கு மட்டும் கேட்கும்போது எல்லாம் கால்ஷீட் கொடுக்கிறாரே விஜய் என்று கோலிவுட்காரர்கள் வியக்காமல் இல்லை.

பிகில் படத்தை அடுத்து அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து சங்கி என்கிற படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. தலைப்பை அறிவித்த கையோடு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சாஜித் நாதியத்வாலா சங்கி தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளது தெரிய வந்தது. கதை தான் காப்பி என்றால் தலைப்புமா, பாலிவுட்டில் நுழையும்போதே பிரச்சனையா என்று அட்லியை பற்றி சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு விமர்சித்தனர்.

அட்லி சிவப்பு நிற ஜெர்சி அணிந்து முதுகை காட்டியபடி எடுத்த புகைப்படத்தை மட்டும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஜெர்சியில் அட்லி 5 என்று இருக்கிறது, புரிந்துவிட்டது, அவர் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் என்று தளபதி ரசிகர்கள் முடிவுக்கு வந்துவிட்டனர். சந்தோஷம் அட்லி, பிகில் போன்று மீண்டும் ஒரு மாஸ் படத்தை எடுத்து எங்களுக்கு ட்ரீட் கொடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிகில் படத்தை இயக்கிய பிறகு ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் அட்லி. அப்பொழுது ரசிகர் ஒருவர் பிகில் ராயப்பன் பற்றி ஒரு படம் எடுக்குமாறு கூற சரி என்றார் அட்லி. அதனால் அவர் பிகில் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறாரோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே பிகில் வசூல் விபரத்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் அட்லிக்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here