மீண்டும் கவுதமுடன் இணையும் சூர்யா – நிச்சயம் வெற்றி தான்!

0
31
காக்க காக்க படத்தின் மூலம் சூர்யா – கவுதம் மேனன் இருவரும் ஒன்று சேர்ந்தனர். இப்படம் கொடுத்த மாஸ் ஹிட்டைத் தொடர்ந்து இந்த கூட்டணியில் வாரணம் ஆயிரம் படம் வெளியானது. இதுவும் தாறுமாறாக வரவேற்பு கொடுக்கவே 2008 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டது.

இப்படத்தைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தை எடுத்தார். இதில், முதலில் சூர்யா நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால், இப்படத்தில் சூர்யாவிற்குப் பதிலாக விக்ரமை நடிக்க வைத்தார் இயக்குநர் கவுதம் மேனன். இதன் விளைவாக சூர்யாவிற்கும், கவுதம் மேனனுக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக இப்படம் உருவாகி வந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு விடிவு காலம் பொறந்தாச்சு. போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் இப்படம் திரைக்கு வருகிறது. இதே போன்று தனுஷ் – கவுதம் மேனன் கூட்டணியில் உருவான எனை நோக்கி பாயும் தோட்டா படமும் பல வருட போராட்டத்திற்குப் பிறகு இந்த மாதம் 29 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படங்கள் காதலை மையப்படுத்திய படமாக இருக்கும் அல்லது ஆக்‌ஷன் படமாக இருக்கும். ஆனால், காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் காதலை மையப்படுத்திய படமாக வெளிவந்தது. இப்படங்களைத் தொடர்ந்து தங்களுக்கு இடையில் இருந்த பகையை மறந்து மீண்டும் சூர்யா – கவுதம் மேனன் ஆகியோர் புதிய படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஜோஷ்வா என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு சூர்யாவின் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ மீண்டும் சூர்யா – கவுதம் மேனன் கூட்டணி இணைந்ததே பெரிய விஷயம். அப்படியிருக்கும் போது அவர்கள் கூட்டணியில் புதிய படம் வந்தால் அது கண்டிப்பாக ஹாட்ரிக் ஹிட்டாக இருக்கும் என்று இப்போதே கொண்டாடி வருகின்றனர்.
அண்மையில், சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது சூரரைப் போற்று படமும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. வரும் 10 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here