மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை தமிழக அரசியலில் தமிழ் மக்கள் நிகழ்த்துவார்கள் – ரஜினி

0
17

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.

கமல்தான் முதல்வர் வேட்பாளர் என நேற்று ஸ்ரீப்ரியா சொன்ன கருத்து பெரும் சர்ச்சையாகிய நிலையில் இன்று இந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பளிச்சென பதிலளித்தார். கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்றும், அதுகுறித்து இப்போது எதுவும் பேச முடியாது என்றும் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் எனது கட்சியினர்களுடன் கலந்து ஆலோசித்து இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் நான் வாங்கிய இந்த விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம் என்றும் இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறினார். மேலும் அதிமுகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ‘2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை தமிழக அரசியலில் தமிழ் மக்கள் நிகழ்த்துவார்கள் என்று தெரிவித்தார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here