மருத்துவ சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்த பரவை முனியம்மாவின் தற்போதைய நிலை!

0
43

நூற்றுக்கணக்கான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்களை பாடிய இவர் மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என இவர் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பரவை முனியம்மாவுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரவை முனியம்மாவுக்கு நடிகர் சங்கமும், தமிழக அரசும் நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் நடிகர் அபி சரவணன் முயற்சியால் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ், பரவை முனியம்மாவின் முழு மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில் பரவை முனியம்மாவின் உடல்நிலை குறித்து நடிகர் அபி சரவணன் கூறியபோது, “பரவை முனியம்மா பாட்டி நலமுடன் வீடு திரும்பினார். இலவச மருத்துவம் பார்த்த வேலம்மாள் மருத்துவ நிர்வாகத்திற்கும், அதற்காக மருத்துவமனையை தொடர்பு கொண்டு உதவிய ஜசரி கணேஷ் மற்றும் நடிகர் சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

இவர் விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி…’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான பரவை முனியம்மா அந்த படத்தின் வெற்றிக்குபின் சுமார் 80 படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பரவை முனியம்மா நலமுடன் வீடு திரும்பிய செய்தி அவரது குரல்களுக்கு ரசிகர்களாகிய அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here