பிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா? படக்குழு விளக்கம்

0
98

பிகில் படத்தில் ஷாருக் நடிப்பது உண்மையா? படக்குழு விளக்கம்
நடிகர் விஜய்யின் பிகில் படம் தற்போது பரபரப்பான ஷூட்டிங்கில் உள்ளது. அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இதில் 15 நிமிடம் வரும் ஒரு சிறிய நெகடிவ் ரோலில் நடிக்கிறார் என கடந்த இரண்டு நாட்களாக செய்தி பரவி வருகிறது.
சில மாதங்கள் முன்பு இந்த செய்தி வந்தபோது வதந்தி என்றனர், ஆனால் தற்போது மீண்டும் அது பரவி வருகிறது. விஜையுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவார் ஷாருக் கான் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் இது பற்றி படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவரிடம் கேட்டதற்கு “இப்படி வதந்திகள் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஷாருக் இந்த படத்தில் நடிக்கவில்லை” என பதில் கூறியுள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here