பல வருடங்கள் கழித்து மீண்டும் விரதம் இருக்கும் நயன்தாரா

0
30

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கும் படங்களில், ஏற்றுக்கொண்ட கேரக்டரில் ஒன்றிப் போய் விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் அவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011ம் ஆண்டு அவர் ’ஸ்ரீராமஜெயம்’ என்ற படத்தில் சீதை கேரக்டரில் நடித்த போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை விரதம் இருந்தார். அது மட்டுமின்றி படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து முழுக்க முழுக்க சைவ உணவுகளையே சாப்பிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஏற்று நடிக்கும் சீதை என்ற புனிதமான வேடத்திற்கு அவர் கொடுத்த பக்தியுடன் கலந்த மரியாதையே இந்த விரதத்திற்கு காரணம் ஆகும்.

இந்த நிலையில் 8 வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா தற்போது ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை அடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரையும் விரதமிருந்து, சைவ உணவுகளையே சாப்பிட அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நயன்தாராவின் இந்த தொழில் பக்தி, கோலிவுட் திரையுலகினர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here