படவாய்ப்பிற்காக கவர்ச்சியில் கவனம் செலுத்தும் ரைசா

0
112

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மாடல் அழகியான ரைசா வில்சன் சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்களில் சிலர் ரைசாவின் அழகை புகழந்திருந்தார்கள், சிலரோ இவர் ஹீரோயின் மெட்டீரியல் கிடையாது. தனுஷின் விஐபி 2 படத்தில் வந்த சைடு கதாபாத்திரத்திற்கு தான் சரிபட்டு வருவார் என்று விமர்சித்தனர். அந்த படத்தை அடுத்து அவர் மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் ஆலிஸ் படத்தில் ரைசாவுக்கு வெயிட்டான கதாபாத்திரமாம்.

ரைசா தனது கவர்ச்சிப் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை வெளியிட்டு நான் பார்ப்பதை நீங்களும் பார்க்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அவ்வளவு தான், அந்த கேள்வியை பார்த்தவர்கள் கமெண்ட் பாக்ஸில் சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக கமெண்ட் போட்டுள்ளனர். சில ஜொள்ளு பார்ட்டிகளோ, ஏய் ரைஸ், நீ ரொம்ப அழகா இருக்க, நாம் கல்யாணம் கட்டிக்கலாமா என்று கேட்டுள்ளனர். நீங்கள் பார்ப்பதை நாங்கள் பார்ப்பது இருக்கட்டும் முதலில் உடையை ஒழுங்காக அணியுங்கள் என்று சிலர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

நீச்சல் குளத்தில் ஷோல்டர் லெஸ் உடையில் ரைசா ரொம்ப ஃபீல் பண்ணி போஸ் கொடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் பெங்களூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, என்ன அழகு, உன் முகம் என்ன முழு நிலவா, என் கண்ணே பட்டுவிடும் போன்று. முதலில் சுத்திப் போடுங்க ரைசா என்று தெரிவித்துள்ளனர். ரைசா தனக்கு ஹேர்ஸ்டைல் மற்றும் மேக்கப் போட்டவர் என்று கூறி ஒருவரை மென்ஷன் பண்ண அவரோ அது நான் இல்லை, சரியான நபரின் பெயரை குறிப்பிடவும் என்று தெரிவித்துள்ளார்.

ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குறைவதாக கூறப்படும் நிலையில் அவர் இப்படி ஒரு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் நாளை ஆதித்ய வர்மா படம் ரிலீஸாக உள்ளது. முதலில் வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டபோது அதில் ரைசா நடித்திருந்தார். பின்னர் அவரை நீக்கிவிட்டு ப்ரியா ஆனந்தை நடிக்க வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. த்ருவ் நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது என்பதால் விக்ரம் தான் ரொம்ப டென்ஷனில் உள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here