படத்திற்கு பேனர் வேண்டாம்-விஷால் வேண்டுகோள்

0
20

விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்ஷன் படம் வரும் 15ம் தேதி ரிலீஸாகிறது. இதையொட்டி பேனர் வைக்க வேண்டாம் என்று விஷால் மக்கள் இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘வருகின்ற நவம்பர் 15ம் தேதி புரட்சித்தளபதி விஷால் அவர்கள் நடித்த ஆக்ஷன் திரைப்படம் வெளிவர இருக்கும் மகிழ்ச்சியான தருணத்தில், புரட்சித்தளபதி விஷால் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு பேனர்கள், கொடிகளை வைக்க வேண்டாம். இனிய சொந்தங்கள் ஆக்ஷன் படத்திற்காகப் பேனர்கள், கொடிகள் வைப்பதற்கு ஆகும் செலவுகளை ஏழை, எளியோர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சாலையில் சட்ட விரோதமாக வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அச்சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு மாஸ் நடிகர்கள் தங்களின் படங்கள் வெளியாகும் போது, பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அந்த கோரிக்கையை ஏற்று பேனர் வைப்பதற்குப் பதிலாக அவரது ரசிகர்கள் மக்கள் நலத்திட்டங்களைச் செய்து வருகின்றனர். அந்த லிஸ்டில் விஷாலின் ரசிகர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here