பக்ரீத் திரைவிமர்சனம்

0
56

நடிகர் விக்ராந்த் என்னதான் தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் விஜய்யின் உறவினர் என்றாலும் அவருக்கு சினிமா கேரியர் பெரிய போராட்டமாக தான் உள்ளது. தொடர்ந்து பல வருடங்களாக ஹீரோவாக ஒரு ஹிட்டாவது கொடுக்கவேண்டும் என போராடி வருகிறார். அவருக்கு இந்த படமாவது உதவியதா? வாருங்கள் பார்ப்போம்.

கதை:

வாழ்க்கையே போராட்டமாக இருக்க மனைவி மகள் தான் உலகம் என வாழ்த்துக்கொண்டிருக்கிறார் விக்ராந்த். நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் வங்கி கடனுக்காக அலைகிறார்.
ஒரு சமயத்தில் இஸ்லாமியர் ஒருவரது வீட்டிற்கு கடன் கேட்க செல்கிறார் விக்ராந்த். அங்கு பக்ரீத் பண்டிகைக்கு வெட்டுவதற்காக கொண்டுவந்த ஒட்டகத்துடன் ஒரு குட்டியும் உள்ளது. அதை இரக்கத்துடன் தன்னுடைய வீட்டிற்கு கொண்டு வருகிறார் விக்ராந்த். அவருக்கு அந்த பாயும் கடன் கொடுக்க விவசாயத்தை மேற்கொள்கிறார்.
அந்த ஒட்டகம் குடும்பத்துடன் நெருங்கி பழகிவிட்ட சமயத்தில் அதற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. நம் ஊரின் கால நிலை தான் அதற்கு ஓத்துக்கொள்ளவிலை, மீண்டும் ராஜஸ்தான் கொண்டு சென்று விட்டுவிடலாம் என மருத்துவரின் அறிவுரையை கேட்டு கிளம்புகிறார் விக்ராந்த்.
அதில் அவர் சந்திக்கும் சிக்கல்களையும் பிரச்னைகளையும் காட்டியுள்ளது மீதி படம்.

விக்ராந்த் நடிப்பு எப்படி?

விக்ராந்த் இந்த முறை சிறப்பான நடிப்பை பதிவு செய்துள்ளார். நடிகர் விஜய் போலவே இவர் செய்கிறார் என இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் ஒரு விமர்சனம் இவர்மீது இருந்தது. அதையெல்லாம் மாற்றி தற்போது தனக்கென ஒரு உடல்மொழியை திரையில் பதிய வைத்துள்ளார் விக்ராந்த். அவரது கேரியரில் சிறந்த நடிப்பு என இந்த படத்தை குறிப்பிட்டே சொல்லலாம்.
மேலும் அவருக்கு மனைவியாக நடித்துள்ள வசுந்தரா, மகளாக நடித்துள்ள பேபி ஷ்ருத்திகா ஆகியோரின் நடிப்பு குறை சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாகவே இருந்தது.

பாசிட்டிவ்:

லாரியிலேயே வடஇந்தியாவின் பல இடங்களை சுற்றி காட்டிவிடுகின்றனர். மனிதர்களை வைத்தே படம் எடுப்பது கஷ்டம், ஆனால் இயக்குனர் ஒட்டகத்தை வைத்து மிக தைரியமாக படம் எடுத்துளளார்.
அன்பு என்ற ஒன்றை மட்டும் பிரதானமாக கொண்டு முழு படமும் நகர்கிறது. நம்முடைய செல்ல பிராணிகள் தான் படம் பார்க்கும் போது நினைவுக்கு வரும்.

நெகட்டிவ்:

-இரண்டாம் பாதியில் சுவாரசியம் இல்லாத பல காட்சிகள்.
-பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகாத இமான் இசை. பாடல்கள் ஓகே.

மொத்தத்தில் பக்ரீத் – ஃபீல் குட் படம். ஒரு முறை குடும்பத்துடன் பார்க்கலாம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here