நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்.. பக்குவமாக கையாண்ட இளம் நடிகை!

0
163

நடிகை நிவேதா தாமஸை ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தது போல தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார்.

தெலுங்கிலும் நானி போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து அதிக ரசிகர்களை பெற்றுவிட்ட அவர் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல Chat க்கு வந்த அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்க வெர்ஜினா என கற்பு சார்ந்த கேள்வியை கேட்க நடிகை கடுப்பாகியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் முதலில் நீங்கள் ஒரு சக மனுஷியிடம் பேசுகிறீர்கள் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். மரியாதையையும், கண்ணியத்தையும் கொடுங்கள். உங்களின் நேரத்தை எனக்காக செலவழித்தற்காக நன்றி. விரைவில் மீண்டும் சந்திக்கலாம் என கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here