நடிகர் அதர்வா மீது மோசடி புகார் செய்த திரைப்பட விநியோகஸ்தர்

0
113

நடிகர் காதல் முரளியின் மகன் நடிகர் அதர்வா திரைத்துறையில் இது வரை எந்த வித வம்பு புகார்கள் இன்றி வளர்ந்து வரும் நடிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருகிறார்.

தந்தையை போன்று நல்ல நடிப்பு திறன் கொண்டவர். இப்படி இருக்க நடிகர் அதர்வா ரூ.5.5 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் மதியழகன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் செய்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து மதியழகன் என்ற விநியோகிஸ்தர் கொடுத்த புகாரில் அதர்வா நடித்த ‘செம போத ஆகாதே’ என்ற படத்திற்காக தனது நிறுவனம் அவுட்ரைட் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டு ரு.5.5 கோடி கொடுத்ததாகவும், இந்த ஒப்பந்தத்தின்படி அதர்வா நடந்து கொள்ளாமல்‘செம போதை ஆகாதே’ படத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து கொடுக்காமல் காலதாமதம் செய்ததாகவும், இதனால் இந்த ஒப்பந்தம் விநியோகிஸ்தர் ஒப்பந்தமாக மாறிவிட்டதாகவும், இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அதர்வா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here