தெலுங்கு சினிமா எனக்கு புகுந்த வீடு போன்றது

0
25
உலக நாயகன் கமலஹாசனின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் லாபம் என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் ரவி தேஜா நடித்து வரும் ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் அங்கு அவர் ரீஎண்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கும் ஸ்ருதிஹாசன் இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில் அவர் தெலுங்குத் திரைப்படம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது ’தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பது எனக்கு எப்போதும் மகிழ்வான ஒன்று தான். நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவின் ரசிகர்கள் எனக்கு அன்பு, ஆதரவு கொடுத்துள்ளார்கள். மேலும், இங்கிருந்துதான் என்னுடைய சினிமா வெற்றி தொடங்கியது. எனவே, தெலுங்கும் எனக்கு ஒரு வீடு போலத்தான்,” என்று அவர் பேசியுள்ளார்.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here