திருமணத்திற்கு பின் முன்னாள் காதலன் பற்றி கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை சமந்தா..`

0
105

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருப்பவர் நடிகை சமந்தா. வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாபாத்திரங்களிலும், சிறிய பட்ஜெட் படங்களில் நடிகையாகவும் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்தால் சரியாக இருக்கும் என்று இயக்குநர்கள் போட்டிப்போட்டு புக் செய்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இன்னும் படங்களில் நடித்து வருகிறார்.

அப்படியிருக்க சமீபத்தில் நடிகை சமந்தா பேட்டியொன்றில் முன்னாள் காதலன் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார். சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்துடன் ஜபர்தஸ்த் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பழக்கமாகிய அவருடன் காதலில் விழுந்துள்ளார் சமந்தா.

லிவ்விங் டு கெதரில் இருந்த இருவரும் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்துள்ளனர். இதனால் சினிமாத்துறையே பரபரப்பானது.

முன்னாள் காதல் பற்றி கேள்வி கேட்டதில், அதற்கு சமந்தா, `அப்படியான தவறான முடிவினை எடுத்திருக்கவே கூடாது. என் நல்ல நேரம் அதிலிருந்து சிக்காமல் தப்பித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.. அந்த விஷயத்தில் இருந்து தப்பித்தது கடவுளின் ஆசிர்வாதன் தான் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார் சமந்தா.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here