தளபதி 64 படத்தில் இணைந்துள்ள விஜய் டிவி தொகுப்பாளினி..!

0
41

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் மற்றுமொரு முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா, மேலும் சில முக்கிய கேரக்டர்களில் சாந்தனு, அந்தோணி வர்கீஸ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு இளம் நடிகை இணைந்துள்ளார்.

பல படங்களின் ஆடியோ விழாக்களை தொகுத்து வழங்கிய ரம்யா தான் அந்த இன்னொரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில், தான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இதற்கு மேல் தன்னுடைய கேரக்டர் குறித்து கூற முடியாது என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தற்போது ‘தளபதி 64’ படப்பிடிப்பிற்காக டெல்லியில் இருப்பதாகவும் விஜய்யின் ரசிகையாக இருந்த எனக்கு, தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் என்னுடைய வாழ்க்கை முழுமை அடைந்து விட்டது என்றும், அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் திறமையான இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here