தன்னை திருமணம் செய்துக்கொள்ள ராஜகுமாரன் குதிரையில் வரவேண்டும்

0
148

விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய ஒரு ராஜகுமாரன் வரவேண்டும் என்பதே தனது கனவு என்று அதிதிராவ் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்க சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை.

தனது இரண்டாவது திருமணத்தின் கனவு குறித்து அவர் மேலும் கூறியபோது, ராஜா காலத்து பெண்களுக்கு, இறக்கை இருக்கிற குதிரையில் ராஜகுமாரன் வர வேண்டும், ராஜகுமாரி போல் இருக்கும் தன்னை ஒரே கையால் தூக்கி குதிரையில் உட்கார வைத்து அழைத்து செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசைகள் இருக்கும். அதேபோல் எனக்கும் ஒரு ராஜகுமாரன் வந்தால் நன்றாக இருக்கும்.

ஒரு பெரிய அரசர் காலத்து கோட்டையில் திருமணம், திருமணம் முடிந்தது மாப்பிள்ளையுடன் கடற்கரையில் ஓட்டம், பின்னர் கையை பிடித்து கொண்டு ஒரு நடனம் என்பதெல்லாம் தனது திருமண கனவு என்று கூறியுள்ளார். மேலும் அதிதிராவ் ஹைத்திக்கு ஏற்கனவே அரசு அதிகாரி ஒருவருடன் திருமணம் முடிந்து பின்னர் விவாகரத்தும் ஆகிவிட்டது. அவரது இரண்டாவது திருமணத்தில் அவரது கனவு பலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போடு அதிதிராவ் ஹைதி, விஜய் சேதுபதியுடன் ’துக்ளக் தர்பார்’ ’உதயநிதி நடிக்கும் ‘சைக்கோ’ உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here