தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷை புகழ்ந்த மீரா மிதுன்..!ரசிகர்கள் கொடுத்த பதிலடி..

0
104

பிக் பாஸ் 3 மூலம் பிரபலமான மீரா மிதுன் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் அவர் தனது நண்பன் நடிகர் விஷாலை பாராட்டி பேசிய பழைய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்தார்.

அதை பார்த்த விஷால் ரசிகர்களோ, “அண்ணா மீரா மிதுன் எதையோ மனதில் வைத்து தான் இந்த வீடியோவை மீண்டும் போஸ்ட் செய்திருக்கிறார், சூதானமாக இருந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்தனர்.

விஷால் வீடியோவை அடுத்து தனுஷின் மீம்ஸ் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அந்த மீம்ஸில், “இதுவரைக்கும் மீரா பேசித்தான பாத்த, செஞ்சி பாத்தது இல்லையே, இனிமேல் பாப்ப” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர் போட்ட மீம்ஸை ஷேர் செய்து தனுஷ் தான் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார் மீரா.

அந்த மீம்ஸை ரசிகர்கள்,
நீங்கள் என்ன தான் ஐஸ் வைத்தாலும் தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. முதலில் அந்த மீம்ஸை நீக்குங்கள். அசிங்கமான அர்த்தம் வருகிறது. தமிழ்நாடே வேண்டாம் என்று தானே மும்பைக்கு சென்றீர்கள். ஏதோ பாலிவுட், ஹாலிவுட் படத்தில் எல்லாம் நடிக்கப் போவதாக பேட்டி அளித்தீர்கள்.
தற்போது எதற்காக தமிழ் பட வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலரோ மீரா மிதுனை மோசமாக கலாய்த்து கமெண்ட் போட்டுள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here