விஜய் சேதுபதி முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ள சங்கத்தமிழன் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கின்றது. தமிழ்நாட்டின் மக்கள் செல்வன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர். ரசிர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர் என்றால் விரல் விட்டு எண்ணும் கணக்கில் நம்ம விஜய் சேதுபதிக்கு தனி இடம் உண்டு. ரசிகர்களை மதிக்கவும் அன்போடு அரவணைக்கவும் தெரிந்த ஒரே நடிகர் என்றால் அது மிகையாகாது.
சங்கத்தமிழன் படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை விஜய் சந்தர் மற்றும் பாரதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்தை விஜய் சந்தர் இயக்கிருந்தார். `சங்கத்தமிழன்’ படம் அக்டோபர் 15ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் சேதுபதியுடன் இந்தப்படத்தில் நிவேதா பெத்து ராஜ், ராஷி கண்ணா, நாசர், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசரும், `கமலா கலசா’ என்ற ஒரு பாடலும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் முதல் நாள் காட்சியை First Day First Show(FDFS) காண தமிழ்சினிமா https://tamilcinema.com/ இணையதளம் உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பை வழங்குகின்றது.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை:
1. உங்களுக்கு மக்கள் செல்வம் “விஜய் சேதுபதியை” ஏன் பிடிக்கும் என்கிற காரணத்தை டைப் பண்ணவும்.
2. காரணத்துடன் #ilikesethupathi என செய்திக்கு கீழ் இருக்கும் Comment பாக்ஸில் போஸ்ட் செய்யவும்.
3. அல்லது https://www.facebook.com/tamilcinemadotcom என்கிற FB பக்கத்தில் comment பண்ணவும்.