சினிமாவை விட்டு போகிறேன் என்ற ரஜினிக்கு – கமல் கூறிய பதில்

0
37

நான் சினிமாவை விட்டு போகபோகிறேன்.. அரசியலுக்கு வர போகிறேன் என்று சொல்லியே மகள் மற்றும் பேத்தி வயதி நடிகைகளுடன் நடித்துவிட்டார். இப்போ தெரியுமே நாங்கள் யாரை பற்றி சொல்கிறோம் என்று.

ஆமாம் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் பல சமயங்களில் தான் சினிமாவை விட்டே போகப்போவதாக நடிகர் கமல்ஹாசனிடமும் கூறியிருக்கிறாராம். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சண்டை பற்றி கேட்ட கேள்விக்கு தான் கமல் இந்த தகவலை கூறியுள்ளார்.

ஆரம்பம் முதலே ரஜினி-கமல் ஆகியோரை போட்டியாளர்களாக கருதி ரசிகர்கள் இரண்டாக பிரிந்திருந்தார்கள். தற்போது அதே போல விஜய்-அஜித் ஆகியோரது ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒருமுறை ரஜினி சினிமாவை விட்டு போகிறேன் என சொன்னதும் கமல் சொன்ன பதில் இதுதான்.

“அதெல்லாம் செஞ்சி தொலைக்காதீங்க. எனக்கு இன்னும் நெறய வேலை இருக்கு. ஒருத்தர் போனால் இன்னொருவரும் போகணும் என்று அடம்பிடிப்பார்கள். நான் போக தயாராக இல்லை” என கமல் கூறினார். மேலும் பேசிய அவர், “ரசிகர்கள் அப்படிதான் இருப்பார்கள். கொஞ்ச நாளில் வளர்ந்துவிடுவார்கள். நாங்கள் தனியாக பேசும்போது ரசிகர்கள் சண்டை பற்றி என்ன பேசுவோம் என தெரிந்தால் துடித்துப்போவார்கள் அந்த ரசிகர்கள்” என கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here