கோமாளி திரைவிமர்சனம்

0
139

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என கூறி பல ஆண்டுகள் காலதாமதம் செய்து வருவதை கலாய்த்து ஒரு காட்சி ட்ரைலரில் வந்ததால் பெரிய சர்ச்சையில் சிக்கிய படம் கோமாளி. எதிர்ப்பு வந்ததால் படக்குழு அந்த காட்சியினை நீக்கிவிட்டனர். இந்த சர்ச்சை படத்திற்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்தது.
இன்று திரைக்கு வந்துள்ள கோமாளி படம் எப்படி? வாங்க பார்ப்போம்.

கதை:

பிளஷ்பேக் பகுதிகளுடன் ஆரம்பிக்கிறது படம். ஜெயம்ரவி மற்றும் யோகி பாபு ஒன்றாக 12ம் வகுப்பு படிக்கின்றனர். அப்போது ஜெயம் ரவிக்கு பள்ளியில் புதிதாக சேரும் சம்யுக்தா ஹெக்டே மீது காதல் ஏற்படுகிறது. அவரிடம் காதலை டிசம்பர் 31ம் தேதி சொல்ல செல்கிறார் ஜெயம் ரவி. அதே நாளில் அந்த பகுதியில் டான் ஆகவேண்டும் என இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு கொலை செய்ய திட்டமிடுகிறார்.
ஜெயம் ரவி சம்யுக்தவிற்கு கிப்ட்டாக கொடுத்த ஒரு சிலையையும் அப்போது திருடிக்கொண்டு சென்றுவிடுகிறார் ரவிக்குமார். அந்த சமயத்தில் ஜெயம் ரவி விபத்தில் சிக்க கோமாவிற்கு சென்றுவிடுகிறார்.
16 வருடங்கள் கழித்து கோமாவில் இருந்து திரும்பும் அவருக்கு உலகமே தலைகீழாக இந்த இடைவெளியில் மாறிவிட்டது ஆச்சர்யம் தருகிறது. இந்த சமயத்தில் பெரிய பணத்தேவை ஏற்படுகிறது.
அதை எப்படி சமாளித்தார் ஜெயம் ரவி என்பதை காட்டுகிறது மீதி படம்.

பாசிட்டிவ்:

இந்த படத்தின் பெரிய பிளஸ் கதை தான். அதில் கச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. பிளாஷபேக் காட்சிகள் மற்றும் தற்போது நடக்கும் காட்சிகளிலும் அதிகம் வித்யாசம் காட்டி நடித்துளளார் அவர். 90ஸ் கிட்ஸ் அனுபவித்த விஷயங்களை தற்போது தேடிச்செல்வது முதல் படத்தில் வரும் பல விஷயங்கள் நம்மை ஈர்க்கிறது.
ஜெயம் ரவி அளவுக்கு யோகி பாபுவும் காமெடியில் பின்னி பெடலெடுத்துள்ளார்.
காஜல் அகர்வால், சம்யுக்தா அழகு பதுமைகளாக வந்து செல்கின்றனர். நடிப்பில் பெரிய வேலை இல்லை.
ஹிப்ஹாப் ஆதியில் இசையும் வழக்கம்போல துள்ளல் தான்.

நெகடிவ்:

நல்ல கதை என்றாலும், படத்தில் திரைக்கதையில் எந்த திருப்பமும், ஏற்ற இறக்கமும் இல்லாதது சற்று ஏமாற்றம்.

மொத்தத்தில் கோமாளி நிச்சயம் சிரிக்கவைக்கும்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here