கொரானாவிற்காக அஜித் இத்தனை கோடிகள் கொடுத்தாரா?.தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்

0
12

அனைத்து உலகமே கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியில் இருந்து வருகிறது. பல நாடுகள் இதை கட்டுப்படுத்த என்ன செய்வது என்று அள்ளாலப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல நாடுகள் மக்கள் யாரும் ஒன்று கூடாதவண்ணம் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் தேவையான பொருட்கள் வாங்க மட்டும் வாங்க வெளியில் வருகிறார்கள். இதை அனைத்து தரப்பினரும் கடைப்பிடித்து வருகிறார்கள். இதில் சினிமாத்துறை தங்களது படப்பிடிப்பிகளை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். கொரானா தொற்றினை கட்டுப்படுத்த இந்திய அரசிடம் போதுமான நிதித்தொகை இல்லாமல் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

இதனால் தங்களால் முடிந்ததை கொடுக்குமாறு இந்திய மக்களிடம் மத்திய அரசும், மாநில அரசுகளும் கேட்டு கொண்டுள்ளது. இதனால் பலர் மனம் வந்து நிவாரணத்தொகையை அளித்து வருகிறார்கள். இதில் சினிமா பிரபலங்களும் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம்வரும் நடிகர் தல அஜித் குமார் மாநில அரசிற்கு பிரதமர் நிவாரண நிதி ரூபாய் 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதி ரூபாய் 50 லட்சமும், ஃபெப்சி நிவாரண நிதியாக ரூபாய் 25 லட்சமும், பி.ஆர்.வோ நிதிக்கான 2.5 லட்சமும் கொடுத்துள்ளார். இத்தகவலை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கையை அளித்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here