கைதி திரைப்படத்தை பாராட்டிய மகேஷ் பாபு

0
32

தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவை உடைத்து ஹீரோயின் இல்லாமல், பாடல்கள் இல்லாமல், முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன், ஒரே இரவில் நடக்கும் ஆக்சன் கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘கைதி’.

இந்த திரைப்படம் ‘பிகில்’ என்ற பிரமாண்டமான படத்துடன் வெளிவந்த போதிலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விமர்சனங்கள் கொடுத்த பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படத்திற்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன இந்த நிலையில் ’கைதி’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’கைதி’ படத்தை பார்த்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

கைதி திரைப்படம் வித்தியாசமான புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றும் திரில்லிங் காட்சிகள் அசத்தலாக இருப்பதாகவும், இதன் திரைக்கதை மிகவும் அருமையாக இருப்பதாகவும் , பாடல்களை இல்லாமல் படங்கள் உருவாகுவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என்றும், இந்த படத்தின் குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகேஷ்பாபு இந்த பாராட்டுக்கு ‘கைதி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here