குழந்தை பெற்றுக் கொள்ளும் தேதி நேரத்தை ரசிகருக்கு அறிவித்த சமந்தா!

0
160

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவிடம் செய்தியாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, ’உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான். இந்த கேள்விக்கான பதிலை சொல்லி சொல்லி சலித்துப் போன சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலை 7 மணிக்கு எனக்கு குழந்தை பிறக்கும்’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சமந்தாவின் செல்ல நாய்க்குட்டியான ’ஹாஷ்’ என்ற நாய்குட்டியின் முதலாவது பிறந்த நாளை கணவருடன் இணைந்து அவர் கொண்டாடியுள்ளார். இதற்காக ஒரு சின்ன பார்ட்டி வைத்த சமந்தா தனக்கு நெருங்கிய நண்பர்களையும் இந்த பார்ட்டிக்கு அழைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

சமந்தா தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ’96’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பதும் மேலும் அவர் ஒரு வெப் சீரீஸ் ஒன்றிலும் நடித்து கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Making memories .. Today, tomorrow, forever….

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here