கிறிஸ்துமஸ்சிற்கு விருந்தளிக்க வருகிறார் சிவகார்த்திகேயனின் ஹீரோ!

0
37

மிகப்பெரிய பட்ஜெட் ஏதும் இல்லாமல் போட்ட காசை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையை இயக்குநர் மற்றும் புரொடியுசருக்கு கொடுத்துக் கொண்டிருப்பவர் சிவ கார்த்திகேயன். சரியான வருமான வரி கட்டுவார், உண்மையை மட்டும் பேசுவார், நியாமான மனிதர் என்கிற பல நல்ல குணங்களை கொண்டவர். இதனாலையோ என்னவோ இவரது படம் மிகப்பெரிய தோல்வியை இது வரை கண்டதில்லை.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் ’இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஹீரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் டிசம்பரில் கிறிஸ்மஸ் திருவிழா விருந்தாக இந்த படம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் வியாழன் அன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் அமைந்த இந்த சிங்கிள் பாடலை வரவேற்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்தப் பாடல் நிச்சயம் அவரது ரசிகர்களை தாளம் போட வைக்கும் என்று நம்பலாம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய வேடங்களில் ஆக்சன்கிங் அர்ஜூன் மற்றும் இவானா நடித்து வரும் இந்த படம் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here