காப்பான் விமர்சனம்

0
34
Suriya Kaappaan Movie First Look Poster HD

சூரியாவில் சமீபத்திய படங்கள் பெருமளவிற்கு வெற்றி கொடுக்கவில்லை என்றாலும் சுமாராக ஓடியது. இந்நிலையில் கேவி ஆன்ந்த இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்த படம் தான் காப்பான். சூரியா, ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி ஆகியோர் நடித்த காப்பான் விமர்சனத்தை காண்போம்..

திரில்லர், ஆக்‌ஷன் காட்கள் அமையுமாறு கதையை வைத்திருப்பார் கேவி ஆனந்த். ஆனால் காப்பான் படத்தில் சிலிபிரா என்ற பூச்சி இனத்தை பிரம்மாண்டமாக காண்பித்துள்ளார். பிரதமராக இருக்கும் மோகன்லால் கொலை செய்ய திட்டமிரும் கும்பலிடமிருந்து காப்பாற்ற சூரியா பல வேலைகளை ரகசியமாக செய்கிறார். இதை வைத்துதான் கதை ஆரம்பித்து பிரதமரை யார் யாரெல்லாம் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள் என்பதை தேடுகிறார் சூர்யா.

வட இந்தியரை வில்லனாக நடிக்க வைத்தது இந்த படத்தில் மிரட்டுகிறார். ஆக்சன் சீன்கள், பாடல் காட்சிகளை எல்லாம் ஒளிப்பதிவாலர் நன்றாக அமைத்துள்ளார். நடிகர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து கதையை நகர்த்துகிறார்கள். பல டிவிஸ்ட்டுகளை படத்தில் வைத்திருக்கும் கேவி ஆனந்த் பல லாஜிக் மீரல்களையும் செய்திருக்கிறார். நீங்கள் படத்தில் பார்க்கும் போது அது அப்படியே தெரியும்.

ஹாரிஸின் பாடல்களும் இசையும் கொஞ்சம் ஏமாற்றமே தந்துள்ளது. சமுக அக்கரை கருத்துகளையும், பெண்கள் மீதான அபிப்ப்ராயத்தை கூறியுள்ளது. ஸ்டெண்ட், பாடல்காட்சிகள், சூர்யாவின் நடிப்பு காப்பானை காப்பாற்றியுள்ளது. திரும்பி திரும்பி சொன்னதை சொல்லிக்கொண்ட கதைகளமும், நீளத்தை குறைத்திருக்கலாம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here