கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்!

0
24

தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும் காலடி எடுத்து வைத்து உலக நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆனதையடுத்து ‘கமல்ஹாசன் 60’ என்ற பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் ஏற்கனவே பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ள நிலையில் தற்போது அவருக்கு கெளரவ டாக்டர் பட்டமும் கிடைத்துள்ளது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக ஒடிஷா மாநிலத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இன்று ஒடிஷா பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் கமல்ஹாசனுக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here