ஏ.ஆர். ரஹ்மானின் ஆசிரியர் பிரபல இசையமைப்பாளர் மரணம்.. அதிர்ச்சியில் தென்னிந்திய சினிமா..

0
24

உலகமே கொரானா வைரஸால் முடங்கி இருக்கும் நிலையில் சினிமாத்துறையில் சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர் நடிகைகள் பணியாளர்கள் ஆகியோர் படபிடிப்பில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

சமீபகாலமாக யார் இறந்தாலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் மலையாள சினிமாவில் கடந்த பல வருடங்களாக சுமார் 500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து வந்த எம்.கே. அர்ஜுனன் மரணம் அடைந்துள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அர்ஜுனன் கொச்சியில் உடல நலக்குறைவால் மரணமடைந்தார் என்று செய்தி வெளியானது. பலமணி நேரம் கழித்துதான் இந்த செய்தி சினிமாத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் சினிமா பிரபலங்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் ஏ.ஆர். ரஹ்மானின் ஆசிரியராக இருந்து கீ போர்ட் வாசிக்க கற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here