உதயநிதி பற்றி அவதூறு புகார் தெரிவித்தேனா? பதில் கூறுகிறார் நடிகை ஸ்ரீரெட்டி

0
26

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் தன்னை படுக்கைக்கு அழைததாக பகிரங்கமாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்ததாக தகவல்கள் பரவின. இதுகுறித்து இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்ரீரெட்டி விளக்கம் அளித்தபோது, ’தனக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த விதமான தொடர்பும் கிடையாது என்றும், தனது பெயரை யாரோ தவறாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது: சமீபத்தில் உதயநிதி மீது நான் புகார் கூறியதை போன்ற ஒரு பதிவை பார்த்தேன். அது போலியான புகார். அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. என் பெயரை வைத்து உதயநிதி மீதும், திமுக மீதும் களங்கம் கற்பிக்க முயல்கின்றனர். நான் உதயநிதியை நேரில் பார்த்தது கூட கிடையாது. என் பெயரை தவறாக உபயோகித்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். அது என்னுடைய பேஸ்புக் கணக்கு கிடையாது. எனது பெயரில் ஃபேஸ்புக்கில் 100-க்கும் மேற்பட்ட போலியான கணக்குகள் உள்ளன. இதுபற்றி நான் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். என் பெயரை வைத்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் தனக்கு முன்னுதாரணம் என்றும் அரசியலிலும் திரையுலகிலும் கோலோச்சிய அவரை தமிழக மக்கள் கோபுரத்தில் வைத்து கொண்டாடியதாகவும் கூறிய ஸ்ரீரெட்டி, ஜெயலலிதா என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தன் வாழ் நாள் முழுவதும். நான் அவரை போற்றுவேன் என்றும் கூறினார். அதே போல் கலைஞர் மீதும் அவர் மகன் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை எனக்கு உண்டு என்றும் ஸ்ரீரெட்டி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here