ஆர்ஜே பாலாஜியுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

0
30

காமெடி மற்றும் ஆரம்ப நடிகர்கள் படத்தில் நடிப்பதில் நயன்தாரா அதிக ஆர்வம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில்’எல்கேஜி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படம் வசூல் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இதே நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி இந்தப் படத்தை கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்று வெளியான செய்தியை சமீபத்தில் பார்த்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி மற்றும் நயன்தாரா நடிக்கும் இந்த படத்திற்கு ’மூக்குத்தி அம்மன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் வரும் 2020 கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே வேலைக்காரன் மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய படங்களில் ஆர்ஜே பாலாஜியுடன் நயன்தாரா நடித்திருந்தாலும் தற்போது ஆர்ஜே பாலாஜி முதல்முதலாக இயக்கவிருக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here