ஆக்ஷனில் மிரட்டியுள்ள விஷால்! இணையத்தை தெறிக்கவிட்ட ஆக்ஷன் ட்ரைலர்

0
1727

சுந்தர்.சி படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். காமெடி, சென்டிமென்ட் என அனைத்து விஷயங்களுக்கும் அவரது படங்களில் பஞ்சம் இருக்காது.
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து இந்த முறை அவர் நடிகர் விஷாலுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் ஆக்ஷன் படத்திற்காக.

வழக்கமான காமெடி, குடும்ப சென்டிமென்ட் என இல்லாமல் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷனில் மட்டுமே கவனம் செலுத்தியுள்ளார் இயக்குனர். அவரிடம் இருந்து இவ்வளவு சீரியஸ் ஸ்டண்ட் படத்தை யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
சமீபத்தில் வெளிவந்த இந்த படத்தின் ட்ரைலருக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

தற்போது வரை மூன்று மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது இந்த ட்ரைலர். இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒரு முக்கிய பிரச்சனை பற்றியது தான் இந்த படம். விஷால் வழக்கம் போல ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். தமன்னா கவர்ச்சி காட்டியதோடு மட்டுமல்லாமல் ஸ்டண்ட் காட்சிகளிலும் விஷாலுக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார்.

இணையத்தில் ட்ரெண்டாகும் ஆக்ஷன் படத்தின் ட்ரைலர் இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here