அரசியலில் அஜீத்தை இழுத்த ரசிகர்.. மன்னிப்பு கேட்ட பரிதாபம்

0
16

அரசியல் ஆசை இல்லாத ஒரே மாஸ் நடிகர் அஜித்தான் என்பது அனைவரும் தெரிந்ததே. நடிப்பு மற்றும் தனது பொழுதுபோக்குகள் தவிர வேறு எந்த விஷயத்திலும் அவர் தலையிட மாட்டார் என்பதும் குறிப்பாக அவரது படங்களின் புரமோஷன் விழாக்களில் கூட கலந்து கொள்வது இல்லை என்பதும் தெரிந்ததே இருப்பினும் அஜித் குறித்து அவ்வப்போது அரசியல் தலைவர்கள் பேசி வருவார்கள்.

சமீபத்தில் கூட ஒரு அமைச்சர் ரஜினி, கமல், விஜய் எல்லாம் அரசியலுக்கு வரும்போது அஜித் ஏன் வரக்கூடாது? அஜித் நல்லவர், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும் அஜித் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்படுகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அஜித் பெயரில் திடீரென ஒரு கட்சியை உருவாக்கி உள்ளதாகவும், அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போஸ்டரில் அஜித் மற்றும் எம்ஜிஆர் படங்கள் என்பதால் எம்ஜிஆர் அல்லது அஜித் அபிமானிகள் யாராவது இந்த போஸ்டரை ஒட்டி இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் இதை செய்தது ஒரு ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. சுய விளம்பரத்திற்காக இவ்வாரான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அஜீத் ரசிகர்கள் நல்ல காட்டு காட்டிய பிறகு சமூக வளைதளத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here