அயோத்தி தீர்ப்பு குறித்து ரிஜினி கருத்து

0
23

நாடே பெரிதும் எதிர்பார்த்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த தீர்ப்பின்படி சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும், அதே சமயம் அயோத்தியில் மசூதி கட்ட இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது

இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என பெரும்பாலானோர் பாராட்டி வருகின்றனர். ஒருசிலர் மட்டும் தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது வீட்டின் முன்னே செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நான் மதிக்கின்றேன், அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மதவேறுபாடின்றி ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ‘ஜெய் ஹிந்த்’என்று கூறினார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here