அமலாபாலை வருத்தப்பட வைத்த விஜய்சேதுபதி.

0
112

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதியும், அமலாபாலும் முதன் முதலாக ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருந்தனர். விஜய்சேதுபதியின் 33-ஆவது படம் என்பதால் அந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘VSP33’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் ஒரு முக்கிய கேரக்டரில் அதாவது வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முன் தினம் பார்த்தேனே, தடையற தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, சமீபத்தில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யாபுக்கு குரல் கொடுத்திருந்தார். இயக்குனர், டப்பிங் கலைஞர் என்று முகம்காட்டிய மகிழ் திருமேனி, இப்போது விஜய் சேதுபதி படத்தின் மூலம் நடிகரகாவும் களம் இறங்குகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இப்படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அமலாபாலை சமீபத்தில் திடீரென நீக்கினார்கள். இந்தப்படத்துக்காக உடைகள் வாங்க மும்பை சென்றிருந்த நிலையில் மெஸேஜ் மூலம் அமலாபால் நீக்கப்பட்ட தகவலை அவரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடுப்பான அமலாபால் தன்னுடைய அதிருப்தியை மீடியாக்கள் மூலம் வெளிப்படுத்தினார். இந்த விஷயமாக படத்தின் நாயகனான விஜய்சேதுபதி ஒருவார்த்தைகூட விசாரிக்கவில்லை என்பதில் அமலாபாலுக்கு ஏக வருத்தம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here