அன்பளிப்பாக பணம் கொடுப்பவர்களுக்கு தனது வங்கி கணக்கை ட்விட் செய்த பார்த்திபன்

0
50

பார்த்திபன் இயக்கத்தில், அவரே நடித்து வெளியான படம் ‘ஒத்த செருப்பு’. பாடல்கள், ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு நகரும் இந்த படம் விமர்சன ரீதியாக நிறைய பாராட்டுகளை பெற்றிருந்தாலும் வசூலில் பெரும் பின்னடைவையே சந்தித்தது.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் மனக்குமுறல்களை அடிக்கடி ட்விட்டரில் வெளிப்படுத்தி வந்தார். தற்போது ஒத்த செருப்பு திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. தியேட்டருக்கு சென்று படம் பார்க்காத பலர் நெட்ப்ளிக்ஸில் பார்த்துவிட்டு பார்த்திபனை தொடர்பு கொண்டு தியேட்டரில் பார்க்காமல் தவறவிட்டதற்கு வருத்தப்பட்டார்களாம். மேலும் சிலர் இந்த படத்திற்காக நிறைய நஷ்டத்தை சந்தித்த பார்த்திபனுக்கு உதவ முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்த பார்த்திபன் அன்பளிப்பு வழங்க விரும்புபவர்களுக்கு தனது வங்கி கணக்கு எண்ணையும் அதில் பகிர்ந்துள்ளார். நல்ல படம் எடுத்த ஒரு இயக்குனர் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டாரே என பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here